ராஷ்மிகா மந்தனா 
சினிமா செய்திகள்

நடனமாடியபோது நேர்ந்த விபத்து: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பலத்த காயம்!

உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக முக்கிய சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடிக் காட்சிகளின் படப்பிடிப்பை நடிகை ராஷ்மிகா அண்மையில் முடித்திருந்தார்.

பிரபல தென்னிந்திய முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் அடுத்த 6 வாரங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மைசா

இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'மைசா' . கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, முக்கிய பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. நடனமாடிக் கொண்டிருந்தபோது, ராஷ்மிகா மந்தனா எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார்.

மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கீழே விழுந்ததில் அவருக்கு தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முழுமையாகக் குணமடைய குறைந்தது 6 வாரங்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக முக்கிய சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடிக் காட்சிகளின் படப்பிடிப்பை அவர் அண்மையில் முடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.