நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் சமீபத்தில் உதய்ப்பூரில் நடந்தது. திருமண வரவேற்பு ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தினர்.
திருமணத்திற்காக சினிமா படப்பிடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் ராஷ்மிகா. அவரது நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன், திரில்லர் படமான ‘மைசா’ படப்பிடிப்பில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் பங்கேற்று நடித்தார்.
ராஷ்மிகா மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றதை மைசா படத்தின் இயக்குனர் ரவீந்திரபுல்லே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.