சினிமா செய்திகள்

ஷங்கர் வீட்டு கல்யாணத்தில் குத்தாட்டம் ஆடிய ரன்வீர் சிங்

நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மாலை மலர்

கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.