நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் லவ் அண்ட் வார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் கடந்த 2007-ம் ஆண்டில் தனது முதல் படமான சாவாரியாவில் நடித்தார். அதை இயக்கிய பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தற்போது ’லவ் அண்ட் வார்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஆலியா பட், விக்கி கௌஷல் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்குப் பிறகு ரன்பீர் கபூர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தை பன்சாலி புரடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநரே தயாரிப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில், லவ் அண்ட் வார் படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ரன்பீர் ரத்தக் காயத்துடன் கார் ஓட்டுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.