சினிமா செய்திகள்

சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் விரைவில் வெளியாகும் ‘ராமாயணா’!

தீபாவளி பண்டிகையையொட்டி நவ.5ம் தேதி இந்தியாவில் வெளியானது.

இந்தியாவில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம், அடுத்தாண்டு காலாண்டிற்குள் சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு முக்கிய சர்வதேச சந்தைகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சீன அரசிடம் தணிக்கை கோரி ஏற்கனவே படக்குழு விண்ணப்பம் சமர்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படம் ஏற்கனவே ஆங்கிலம் மற்றும் சீன துணைத் தலைப்புகளுடன் ஹாங்காங்கில் வெளியாகிவிட்டது. இதற்கிடையில், உலகம் முழுவதும் தொடர்ந்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் வெளியான அன்றே இங்கிலாந்து, வட அமெரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் 30 மில்லியன் டாலர்களைக் கடக்கும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் பெறும் பாதையில் உள்ளது.

தொடர்ந்து நவம்பர் 19 அன்று, இந்தித் திரைப்படம் பிரேசில், இத்தாலி, உக்ரைன் மற்றும் ஹங்கேரியில் வெளியிடப்பட உள்ளது. நவம்பர் 20 அன்று போலந்திலும், நவம்பர் 26 அன்று அர்ஜென்டினா, மத்திய அமெரிக்கா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் செக்கியாவிலும் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ராமாயணா

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய்பல்லவி, ரவி துபே, ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் ராமாயணா.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.5ம் தேதி இந்தியாவில் வெளியானது.

வால்மீகியின் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், இந்தியாவில் ரூ.1000 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.

ஏற்கனவே நிதேஷ் திவாரியின் தங்கல் திரைப்படம், இந்தியாவில் ஈட்டிய தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக, சுமார் 1,305 கோடி ரூபாய் வசூலித்து சீனாவில் ஒரு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT