சினிமா செய்திகள்

முன்பதிவில் ரூ.5.33 கோடி வசூலித்த ‘ராமாயணா’ - 1.28 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

தீபாவளி பண்டிகையொட்டி நவ.5ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ராமாயணா - பாகம் 1 திரைப்படத்தின்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அக்.21வரை ரூ.5.33 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  3,710 காட்சிகளில் 1.28 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.

ராமாயணம்

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ளப் படம் ராமாயணா.

இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், கே.ஜி.எஃப் புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் புகழ் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளநிலையில், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.

படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஐமேக்ஸ் மற்றும் பிற பிரீமியம் வடிவங்களிலும் நவ.5ம் தேதி வெளியாகிறது.

அக்.20ம் தேதியான தசரா அன்று படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

SCROLL FOR NEXT