ராவணனை பெருமைப்படுத்தும் ராமாயணா பட திரையிடலை நிறுத்த விஸ்வ இந்து பரிஷத் அழைத்து விடுத்துள்ளது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்த 'ராமாயணா ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படம் கடந்த நவம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. சீதையாக சாய் பல்லவி படுத்திருந்தார்.
இப்படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.1200 கோடி வசூலை கடந்து சாதனைகளை முறியடித்து வருகிறது.
இதனிடையே திரைப்படத்தின் திரையிடலை உடனடியாக நிறுத்தவும், அதன் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்யவும் விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆணவம் கொண்ட ராவணனை ஒடுக்கப்பட்டோரின் மீட்பராகச் சித்தரிப்பதன் மூலம், இப்படம் ஒரு அரசியல் கதையை உருவாக்க முயற்சிப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பாக்ரா குற்றம் சாட்டினார்.
ஞானம், பக்தி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெற்றிருந்தபோதிலும், உயிரினங்களை அச்சுறுத்தியும் சித்திரவதை செய்தும் ஒழுக்கமற்றவனாக மாறியுள்ள ராவணனைப் பெருமைப்படுத்துவது, நம்பிக்கையாளர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
மகரிஷி வாத்மீகியின் மூல ராமாயணத்தில் உள்ள பல சம்பவங்கள் திரைப்படத்தில் திரித்துக்கூறப்பட்டுள்ளதாகவும், தனது மனைவி கடத்தப்பட்டதற்குப் பழிவாங்கும் செயலாகவே இராமரின் பயணம் சுருக்கப்பட்டுள்ளதாகவும் பக்ரா குற்றம் சாட்டினார்.
சமூகத்தின் எதிரிகளான அசுரர்களைத் தோற்கடிப்பதும், முனிவர்கள் மற்றும் குருக்களின் யாகங்களைப் பாதுகாப்பதுமே ராமரின் பெரும் கடமையாகும். இருப்பினும், அகல்யாவின் மீட்பு, நிஷாத மன்னன் குகனுடனான நட்பு, கேவட்டனுடனான பக்தி போன்ற, இராமரின் அனைத்தையும் உள்ளடக்கிய ஆளுமையைக் குறிக்கும் முக்கியமான சம்பவங்கள் கூட திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, பல நூற்றாண்டுகளாக தார்மீக விழுமியங்களையும் சமூக, அரசியல் நடத்தை விதிகளையும் வடிவமைத்து வரும் ராமாயணத்தில் செய்யப்படும் இத்தகைய மாற்றங்கள், சமூகத்தின் தார்மீக அடித்தளத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லட்சக்கணக்கான இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும் உணர்வுகளையும் புண்படுத்தும் இதுபோன்ற முயற்சிகளை சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அது மேலும் கூறியது.