சினிமா செய்திகள்

ராமாயணம் பட நிகழ்வு - ரன்பீர் கபூருடன் இணைந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்ட மிஸ்டர் பீஸ்ட்

ராமாயணம் திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற ராமாயணம் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில், நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து மிஸ்டர் பீஸ்ட் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழங்கிய நிகழ்வு சமூக வலைதளத்தில் வைராகியுள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணம் திரைப்படத்தில், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரவி துபே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை நமித் மல்ஹோத்ரா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படத்தை, உலகளவில் உள்ள ரசிகர்களிடம் சென்றடையும் வகையில், முன்னோட்ட நிகழ்வு பல இடங்களில் நடந்து வருகிறது.

அந்த வகையில் ராமாயணம் திரைப்படத்தை உலகளாவிய கண்ணோட்டத்துடன் வெளியிடுவதற்காக, யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட் என்பவரை படக்குழு அணுகியுள்ளது.

இதையடுத்து மும்பையில் நடைபெற்ற ராமாயணம் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில், படக்குழுவினருடன் இணைந்து மிஸ்டர் பீஸ்ட் ரசிகர்களுடன் உரையாற்றினார்.

அப்போது அவர், ரசிகர்களை பார்த்து “ஜெய் ஸ்ரீராம்” என்று கூறினார். இதைக்கேட்ட படக்குழுவினரும் பார்வையாளர்களும் கைதட்டி ஆரவாரமிட்டனர்.

இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது.

SCROLL FOR NEXT