தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ராம் சரண் வளம் வருகிறார். இவர் கடைசியாக சங்கர் இயக்கத்தில் நடித்த 'கேம் சேஞ்சர்' மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராம் சரண் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு பெத்தி படத்தின் கிளிப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் கையில் கதா ஆயுதத்துடன் ராம் சரண் கட்டுமஸ்தான பயில்வான் லுக்கில் குஸ்தி வீரராக ராம் சரண் காணப்படுகிறார்.
'ஆட்டம் தான் என் திமிரு' என்ற வசனத்தின் மூலம் குஸ்தி விளையாட்டை சுற்றி படத்தின் கதை நகரும் என்று இதன் மூலம் யூகிக்கமுடிகிறது.
'பெத்தி' வருகிற ஏப்ரல் 30ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.