சினிமா செய்திகள்

ரஜினியின் பிரத்யேக வீடியோ..!- வெளியானது புதிய அப்டேட்

தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்தார்.

மாலை மலர்

வில்லனாக அறிமுகமாகி, தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் தன்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வைப்பவர்தான் நடிகர் ரஜினி. ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகி இந்தாண்டோடு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த திரைசாதனையை கொண்டாடும் வகையில், அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி, அவரது 'படையப்பா' படம் மீண்டும் திரையரங்குகளில் புதிய பொலிவுடன் திரையிடப்படுகிறது.

இந்த தகவலை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினி பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் வீடியோ வெளியாக தாமதமாவதாக தெரிவித்துள்ளார். விரைவில் வீடியோ வெளியிடப்படும் எனவும் தெரிவிதார்.

ஆனால், ரசிகர்கள் நீண்ட நேரமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், வீடியோ வெளியாகவே இல்லை. இந்த நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய போஸ்டருடன் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்," படையப்பா படத்தின் மாயாஜாலத்தை மீண்டும் அனுபவிக்கும் வகையில், தலைவரின் பிரத்யேக வீடியோ இன்றிரவு 7 மணிக்கு வௌியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

50 YEARS of the ONE and ONLY SUPERSTAR @rajinikanthAn explosive, exclusive video of #Thalaivar reliving the magic of #Padayappa drops tonight!A Legend. A Legacy. Forever in a League of His Own. ??#SivajiGanesan @meramyakrishnan #Soundarya @arrahman @ksravikumardirpic.twitter.com/BFtBDrIzU3