சினிமா செய்திகள்

மகளை இயக்குனராக அறிமுகப்படுத்தும் ராகவா லாரன்ஸ்

தற்போது இயக்குநராகத் தன் திரைப்பயணத்தைத் தொடங்க அவர் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பின்னணி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி கடின உழைப்பால் இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடன கலைஞர், இயக்குநர், நடிகர் என தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பேய் படங்களுடன் நகைச்சுவையை இணைத்து 'ஹாரர்-காமெடி' என்ற ட்ரெண்டை 'முனி' (2007) மற்றும் 'காஞ்சனா' திரைப்படங்கள் மூலம் அசுர வெற்றி பெறச் செய்தார். டான், பாண்டி, சிவலிங்கா, சந்திரமுகி 2, மற்றும் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் ஆகிய படங்களும் தற்போது இவரின் இயக்கத்தில் 'காஞ்சனா 4' மற்றும் நடிப்பில் 'புல்லட்' ஆகிய திரைப்படங்களின் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, சினிமாவை தாண்டி ஏழை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு சொந்த செலவில் மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு உதவி வருவதன் மூலம் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

தற்போது சொந்த தயாரிப்பில் ‘காஞ்சனா 4’ படத்தி உருவாக்கி வரும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக தன் மகள் ராகவி இயக்குநராக அறிமுகமாகும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகவி அமெரிக்காவில் திரைப்பட உருவாக்கம் சார்ந்த படிப்பை முடித்துள்ளார். தற்போது இயக்குநராகத் தன் திரைப்பயணத்தைத் தொடங்க அவர் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT