பியார் பிரேமா காதல், ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இளன், புதிதாக இயக்கி, கதாநாயகனாக அறிமுகமாகும் படம் பியார் பிரேமா கல்யாணம். இப்படத்தில் இயக்குநர் இளனுக்கு ஜோடியாக சான்வே மேகனா நடித்துள்ளார்.
இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் மற்றும் மாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், ஆக.21ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
வெளியீடு தேதி நெருங்குவதைத் தொடர்ந்து போஸ்டர்கள், பாடல்கள் என படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.