தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. இப்படத்தின் சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் அக்.2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையொட்டி, படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்.18ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பட புரமோஷன் விழா ஒன்றில் ஜேசன் சஞ்சய் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அந்த வீடியோக்களில் முதலமைச்சர் விஜய் இப்படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும், தனது தந்தை முதலமைச்சரானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மேலும் தனக்காக அவர் ரசிகர்களை கொடுத்துள்ளார் எனவும் தந்தை குறித்துப் பேசியுள்ளார்.
மேலும் தந்தையிடம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன? என்ற கேள்விக்கு ‘நேரம் தவறாமை’ என பதிலளித்துள்ளார்.