ஜாக்கி 
சினிமா செய்திகள்

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின் புரோமோ ரிலீஸ்

ரொமாண்டிக் ஆகசன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

துருவ் விக்ரம் நடிக்கும் ஜாக்கி படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார்.

பிரம்மன், ஆதித்யா வர்மா படங்களில் உதவி இயக்குநராக கரண் அரவிந்த் குமார் பணிபுரிந்த கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் டைட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜாக்கி

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் 12 அன்று வெளியானது .

அதன்படி துருவ் விக்ரம் நடிக்கும் நான்காம் படமான இதற்கு "ஜாக்கி" என பெயர் சூட்டப்பட்டது. இப்படம் ரொமாண்டிக் ஆகசன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஜாக்கி படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

துருவ் விக்ரம்

'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து 'மகான்' திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக அண்மையில் சைமா விருதும் வாங்கினார். இந்த சூழலில் அவரின் 4வது படமான ஜாக்கி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT