பிரபல கல்வியாளரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவை விஜயவாடாவின் அமராவதியில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள டாக்டர் ஐசரி கே. கணேஷ், ஆந்திர முதல்வரின் நிர்வாகத் திறனையும், வளர்ச்சிப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, விஜயவாடாவின் அமராவதியில், ஆந்திரப் பிரதேசத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், திறமையான நிர்வாகி மற்றும் அரசியல் ஆளுமை எனப் போற்றப்படும் அவரது, நிர்வாகம், மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது.
அவரது தலைமைத்துவமும், தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய அணுகுமுறையும் பொதுச் சேவையில் தொடர்ந்து ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றன.
முன்னேற்றமான ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்கும் அவரது முயற்சிகளில், அவருக்குத் தொடர்ந்து வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
மேலும், முற்போக்கான ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளில், அவருக்குத் தொடர்ந்து வலிமையும் வெற்றியும் கிடைக்கத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் டாக்டர் ஐசரி கே. கணேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.