சினிமா செய்திகள்

மதுரை பழக்க வழக்கங்களை கற்று வருகிறேன் - பிரீத்தி முகுந்தன்!

யாரையும் நான் ரோல்மாடலாக எடுக்கவில்லை. நான் நானாக இருக்க விரும்புகிறேன் - பிரீத்தி முகுந்தன்

ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் அன்பில் அவன். வருகிற 2-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

ஒரு வருடத்தில் 4 படங்கள்

இந்நிலையில் படத்தின் கதாநாயகியான பிரீத்தி முகுந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அன்பில் அவன் படம் மனதிற்கு ரொம்ப திருப்தியாக அமைந்துள்ள படம். படத்திற்காக ரொம்ப உழைத்திருக்கிறேன். ஆக்‌ஷன் காட்சிகள் படத்தோடு சேர்ந்தே இருக்கிறது. இந்த ஆண்டு எனக்கு 4 படங்கள் வந்திருக்கிறது. நாமும் சினிமாத்துறையில் கால் பதித்திருக்கிறோம் என்பதில் எனக்கு பெரிய சந்தோஷம்.

தனுஷ் - பிரீத்தி முகுந்தன்

அடுத்ததாக தனுசுடன் புதிய படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். முதன்முதலாக இப்போதுதான் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கிறேன். திருச்சியில் தான் நான் வளர்ந்தேன்.

மதுரைக்கு அடிக்கடி சென்றிருக்கிறேன். எனவே மதுரையை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் மதுரை பழக்கவழக்கங்களை ஒருவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மதுரை மக்களின் உடல்மொழி, பேச்சுவழக்கு ஆகியவற்றை தெரிந்து கொண்டு படத்தின் கேரக்டரை நுணுக்கமாக பண்ணுவதற்காக பயிற்சி எடுத்து வருகிறேன்.

இந்த படத்தில் அசோக் செல்வனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். யாரையும் நான் ரோல்மாடலாக எடுக்கவில்லை. நான் நானாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

SCROLL FOR NEXT