சினிமா செய்திகள்

Just for happiness.... பிரபுதேவா வெளியிட்ட ஜாலி வீடியோ

பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் `BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது

நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில்`BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து வடிவேலுவும் பிரபுதேவாவும் இணைந்து அவ்வப்போது ஜாலியான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரபுதேவா ஜாலியாக நடனடமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT