சினிமா செய்திகள்

பூக்கி.. விஜய் ஆண்டனி எழுதி பாடிய வீடியோ பாடல் வெளியீடு

நாயகியாக தனுஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அஜய் திஷான், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பூக்கி. கணேஷ் சந்திரா, சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஆவார்.

இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் நாயகியாக தனுஷாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2k கிட்ஸ் காதலை கூறும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் "பூக்கி" திரைப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், படத்தில் விஜய் ஆண்டனி எழுதி பாடிய 'ஜில்லே ஜூஸ்' வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.  

SCROLL FOR NEXT