சினிமா செய்திகள்

பொங்கலுக்கு வெளியாகிறது 'பாக்கெட் நாவல்'

தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'பாக்கெட் நாவல்' படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14-ந்தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் வெளியாகும் இப்படம், இளையராஜாவின் இசையுடன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பாக்கெட் நாவல்’. ஏற்கனவே ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இளையராஜா இசையில் உருவாகி உள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. அதனை தொடர்ந்து ‘பாக்கெட் நாவல்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்து இருந்தால். இதனால் இந்த ஆண்டு இறுதியில் ‘பாக்கெட் நாவல்’ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

பொங்கலுக்கு ரிலீஸ்

இந்த நிலையில், ‘பாக்கெட் நாவல்’ படம் திரையரங்குகளில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘பாக்கெட் நாவல்’ படம் பொங்கலை பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 14-ந்தேதி வெளியாக உள்ளது.

‘பாக்கெட் நாவல்’ படம் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT