PM Modi in Durandhar 2 
சினிமா செய்திகள்

'துரந்தர் 2'ல் PM Modi - படத்தில் இடம்பெற்ற பணமதிப்பிழப்பு காட்சிகள்!

துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தில் மோடி பிரதமராக பதவி ஏற்பது, பணமதிப்பிழப்பை அறிவிப்பது ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மாலை மலர்

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. ஆனால் இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் இன்று (மார்ச் 19) வெளியானது. இப்படத்தில் மோடி பிரதமராக பதவி ஏற்பது, பணமதிப்பிழப்பை அறிவிப்பது ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதவது பாகிஸ்தானிடம் இந்திய ரூபாய் நோட்டுக்களை அடிக்கும் அச்சுகள் கிடைத்து கள்ளநோட்டு புழக்கம் இந்தியாவில் அதிகரித்த நிலையில் அதை தடுக்கவே பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததாக படத்தில் கூறப்பட்டுள்ளது.