பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல், கத்ரீனா கைப். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு கத்ரீனா கர்ப்பமானார் இதனை தொடர்ந்து இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு இறுதியில் முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விஹான் என பெயரிட்டு இருந்தனர்.
அதனை தொடர்ந்து குழந்தையின் முகத்தை இதுவரை விக்கி கவுசல், கத்ரீனா கைப் தம்பதி காட்டாமல் இருந்து வருகின்றனர். இதனிடையே மும்பை விமான நிலையத்திற்கு வந்த விக்கி கவுசல்- கத்ரீனா கைப் தம்பதியினரை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் கத்ரீனா கைப், குழந்தையை தூக்கிக் கொண்டு இருக்கும் தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, இம்மாத தொடக்கத்தில் நடிகர் விக்கி கவுசலின் பிறந்தநாளை கொண்டாடிய கத்ரீனா கைப், மகன் விஹானுடன் இருக்கும் முகத்தை மறைத்தபடியான புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
பல பாலிவுட் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில், தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை எடுக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று செய்தியாளர்களையும், ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறார்கள்.