சினிமா செய்திகள்

'பீட்ஷா 4' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

பீட்ஷா தொடரின் நான்காவது பாகத்தை சி.வி. குமார் எழுதித் தயாரிக்கிறார்.

பீட்ஷா திரைப்படத்தின் நான்காவது பாகம் விரைவில் திரைக்கு வரும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ' பீட்ஷா 4' திரைப்படத்தின் மோசன் போஸ்ட்டரை படத்தின் தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டனர்.

கார்த்திக் சுப்பராஜின் 'பீட்ஷா' (2012) திரைப்படத்துடன் தொடங்கிய பீட்ஷா தொடரின் நான்காவது பாகத்தை சி.வி. குமார் எழுதித் தயாரிக்கிறார். இவர், தனது திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு யோகராஜ் கே. வசனங்களை எழுதியுள்ளார்.மேலும் நிர்வாகத் தயாரிப்பாளராக சிவகுமார் பணியாற்றுகிறார்.  

ஸ்ரீஷ் விஜய் இயக்கவுள்ள இத்திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் புகழ் பிரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சமூக வலைதள பிரபலம் ஹுசைன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படக்குழுவில் ஒளிப்பதிவாளர் ஹரிஹரன் ஆனந்தராஜா, படத்தொகுப்பாளர் பி.கே, மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் விக்னேஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.