சினிமா செய்திகள்

தனுஷின் ‘கர’ படத்திற்கு தடைக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

நடிகர் தனுஷின் கர திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடைவிதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'போர் தொழில்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்துள்ளப் படம் கர. இப்படத்தில் தனுஷுடன் நடிகர்கள் ஜெயராம், ரவிக்குமார், கருணாஸ், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 30ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் தாம் பதிவு செய்த கர என்ற பெயரை மாற்றமால் படத்தை வெளியிடக்கூடாது என மறுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் படம் குறித்த தேதிக்கு வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.