ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘பெத்தி’. புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று வெளியானது.
ஏ.ஆர்.ரகுமான் இசையத்துள்ள இப்படத்தில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி, திவ்யேந்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ராம் சரண், ஊரே அசந்து போகும் அளவிற்கு கிரிக்கெட் வீரராக இருக்கிறார். என்னதான் விளையாட்டு வீரராக இருந்தாலும், மேல் தட்டு மக்கள் இவரை மலை சாதி என்று ஒதுக்கி வைக்கிறார்கள். மேலும் இவருக்கும் ஊர் மக்களுக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் பல இடங்களில் இவர்கள் அவமானப் படுத்தபடுகிறார்கள். இந்த அவமானத்தை துடைக்கவும், தனக்கான அடையாளத்தையும் உருவாக்கவும் ராம் சரண் முயற்சி செய்கிறார். இறுதியில் தனக்கான அடையாளத்தை ராம் சரண் உருவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
‘பெத்தி’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.135.36 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் ‘பெத்தி’ படம் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.