சினிமா செய்திகள்

பருந்து- திரைவிமர்சனம்

ஜோன்ஸ்ரூபர்ட் இசை, காசிவிஸ்வநாதன் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

Maalaimalar

கதை

பள்ளியில் படித்து வரும் மாரிமுத்து மகள் காதலனுடன் ஓடிப்போய் விடுகிறார். இதனால் மனமுடைந்த மாரிமுத்து ஊர்தலைவரான அழகுமலையாரிடம் தன் மகளை மீட்டு தருமாறு உதவி கேட்கிறார்.

இன்னொருபுறம் பெண்ணின் தாய்மாமன் மன்சூர் அலிகானும் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார். ஓடிப்போன காதல் ஜோடியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? காதல் ஜோடிகளின் நிலை என்ன என்பதே படத்தின் மீதிகதை.

நடிகர்கள்

ஊர் தலைவராக வரும் அழகுமலை படத்தை தயாரித்து இயக்கியதுடன் நண்பனுக்காக காதல் ஜோடியை தன் தம்பியுடன் தேடிச் செல்லும் காட்சிகளில் படத்திற்கான விறுவிறுப்பை அதிகரித்துள்ளார்.

அவருக்கு தம்பியாக வருகிறவர் தனது சகோதரனுடன் இணைந்து காதல் ஜோடியை தேடுவதிலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடி கிளப்பியுள்ளார்.

அவரது காதலியாக வரும் ஷர்மிஷா புன்னகை தவழும் அழகோடு காட்சிகளை ரசிக்க வைக்கிறார். மகள் வீட்டைவிட்டு சென்றதால் மனமுடைந்து தவிக்கும் காட்சிகளில் மாரிமுத்து அனுபவ நடிப்பு பார்வையாளர்களை கவர்கிறது.

யதார்த்தமான உடல்மொழியுடனும் வசனங்களுடனும் மன்சூர் அலிகான் நடிப்பு ரசிக்க வைக்கிறது. சென்றாயன், வி.ஆர். நாயக் உள்பட படத்தின் கேரக்டர்கள் கதைக்கு பலமாக அமைந்துள்ளது. சில கதாபாத்திரங்கள் நடிப்பில் நாடகத்தன்மை வெளிப்படுவது குறையாக தெரிகிறது.

இயக்கம்

இளம்பருவத்தில் வாழ்க்கையில் தடுமாறி பெற்றோர்களை தவிக்க விட்டு செல்லும் காதல் ஜோடிகளுக்கு ‘பருந்து’ கொடுத்துள்ள கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று.

இசை & ஒளிப்பதிவு

ஜோன்ஸ்ரூபர்ட் இசை, காசிவிஸ்வநாதன் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

SCROLL FOR NEXT