சினிமா செய்திகள்

Countdown Begins... 'பராசக்தி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.இப்படத்தின் 2-வது பாடல் "ரத்னமாலா" இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

மாலை மலர்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் 'பராசக்தி'. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலாவும் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

இதனிடையே, 'பராசக்தி' படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான 'அடி அலையே' ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2-வது பாடல் "ரத்னமாலா" இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், 'பராசக்தி' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வெளியாவதற்கு 50 நாட்களுக்கான கவுண்டவுடன் தொடங்கியதை குறிக்கும் வகையில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.