பனங்காட்டான் 
சினிமா செய்திகள்

தென்மாவட்டத்தின் உண்மை சம்பவ படம் ‘பனங்காட்டான்’

பாலமேடு, தூத்துக்குடி, ராமநாடு, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம்.

ரைஸ் மேக்கர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரித்துள்ள இந்த படம் தென் மாவட்டத்தில் நடைபெறும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகி உள்ளது.

பனங்காட்டான்

வீரமுருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பனங்காட்டான். படத்தில் அப்புகுட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன்ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன் மெய்ராஜன், விமல்ராஜன், மாஸ்டர் ரோகித், செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ரைஸ் மேக்கர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரித்துள்ள இந்த படம் தென் மாவட்டத்தில் நடைபெறும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகி உள்ளது. படத்திற்கு சுந்தர் இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் வீரமுருகன் கூறியதாவது:-

தென் மாவட்டத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளேன். ஒரு முக்கிய பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஊர் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு வைத்து, அதை மீறி யாரும் உள்ளே வரக்கூடாது, வெளியே போக கூடாது என்று இன்று வரை மறைமுகமாக அதனை கடைபிடித்து வருகின்றனர்.

அது என்ன மாதிரியான கட்டுப்பாடு, அது சமூகத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் இந்த ‘பனங்காட்டான்’. பாலமேடு, தூத்துக்குடி, ராமநாடு, மூணாறு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT