பத்மபிரியா 
சினிமா செய்திகள்

45 வயதில் தாயான பத்மபிரியா

இப்போது தாயான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தாலும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை பத்மபிரியா வெளிப்படுத்தவில்லை.

‘வாழ்க்கையின் 365 நாட்கள் என குழந்தையின் கைகள் தனது ஆடையை பிடித்திருக்கும் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.

மிருகம், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பட்டியல் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பத்மபிரியா. சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்த பத்மபிரியா 2022-ம் ஆண்டு முதல் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத பத்மபிரியா தற்போது 45 வயதில் தாயான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் நிறைவடைந்ததை சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘வாழ்க்கையின் 365 நாட்கள் என குழந்தையின் கைகள் தனது ஆடையை பிடித்திருக்கும் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாக சமூக வலைதளங்களில் பிசியாக இருந்த போதிலும் குழந்தை குறித்து அவர் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இப்போது தாயான மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தாலும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை பத்மபிரியா வெளிப்படுத்தவில்லை. பத்மபிரியாவின் பதிவிற்கு நித்யாமேனன், பார்வதி திருவோத்து, மீராநந்தன் உள்பட பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதில் நடிகை அபிராமியின் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் என் அன்பு தெரியும்’ என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பத்மபிரியா ‘உங்களால்தான் எங்களுக்கு இது கிடைத்தது’ என பதிலளித்திருந்தார்.