பத்ம விருதுகள் 2026 
சினிமா செய்திகள்

ஜூன் 23 பத்ம விருதுகளை பெறும் மம்மூட்டி, ஆர்.மாதவன்

ஜூன் 23 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளின் இரண்டாவது விழா நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கு நபர்களுக்கு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள், இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றாகும்.

இந்த ஆண்டு, குடியரசுத் தலைவர் ஐந்து பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்ம ஸ்ரீ விருதுகள் உட்பட 131 விருதுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளின் இரண்டாம் கட்ட விழா, ஜூன் 23 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.

அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் மதிப்புமிக்க குடிமை விருதுகளை 65 புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு வழங்கவுள்ளார்.

இந்நிகழ்வில் இந்தியத் திரையுலகின் ஒரு மாபெரும் ஆளுமையாக வளம் வரும் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி பத்ம பூஷன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் நடிகரும் திரைப்பட இயக்குனருமான ஆர். மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படவுள்ளது.

இவர்களுடன் மூத்த நடிகர் சதீஷ் ஷாவும் தெலுங்குத் திரையுலக மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத்வும் பத்மஸ்ரீ விருதைப் பெற உள்ளார்.