பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, சபீர், அசோக் செல்வன், கலையரசன், ஃபகத் ஃபாசில், லிங்கேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் வேட்டுவம்.
கேங்ஸ்டர் கதைகளத்தில் உருவாகி வரும் படத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நீலம் புரொடக்ஷன்ஸ், லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் மேக்கிங் வீடியோ எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.