ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் புதுமையான ஜான்ராவில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிளிக்’ (Click). துள்ளலான இளமை, சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு கலகலப்பான யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டெய்னராக இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தை ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் பேனரில் ராஜாபிரபு தயாரிப்பதுடன், அவரே கதையின் நாயகனாகவும் நடித்து அறிமுகமாகிறார். 'பிக்பாஸ்' புகழ் நடிகை ஓவியா மற்றும் ராஜாபிரபு இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்றைய Gen-Z தலைமுறையினருடன் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் இதன் கதைக்களம் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் இப்படம் உறவுகளின் உற்சாகம், காதல் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத சஸ்பென்ஸ் திருப்புமுனைகளை அழகாக வெளிப்படுத்த உள்ளது. ரசிகர்களுக்கு ஒரு முழுமையான திரையரங்கு கொண்டாட்டத்தை இப்படம் வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் ஓவியா மற்றும் ராஜாபிரபுவுடன் இணைந்து அஸ்மிதா, அமுதவாணன், 'லொள்ளு சபா' மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை சுந்தர் மஹாஸ்ரீ இயக்கியுள்ளார். படத்தைத் தயாரிப்பதுடன் ராஜாபிரபுவே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு அருண் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜோசப் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மேலும், ‘கிளிக்’ படத்தின் நிர்வாக தயாரிப்புப் பணிகளை சையத் ஜாஃபர் மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.