சினிமா செய்திகள்

`ப்ளடி பெக்கர்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.

மாலை மலர்

இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

திரைப்படம் இதுவரை 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. தற்பொழுது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.