சினிமா செய்திகள்

திரைப்படமாக உருவாகிறது "OPERATION SINDOOR"

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை திரைப்படமாக உருவாகிறது!

2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதற்காகவும் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்கிற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

அதன்படி, ஆபரேஷன் சிந்தூர் கடந்த ஆண்டு மே 7 அன்று அதிகாலை தொடங்கப்பட்டது. இதில், இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளின் பயிற்சி முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

மே 8-9 தேதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானப் படைகளுக்கு இடையே எல்லைப்பகுதியில் வான்வழி மோதல்கள் (Skirmishes) நடைபெற்றன.

இறுதியில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ நடவடிக்கைப் பணிப்பாளர்களும் (DGMO) பேச்சுவார்த்தை நடத்தி, 2025 மே 10 அன்று போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை படமாக எடுக்க பாலிவுட் திட்டமிட்டுள்ளது.

லெப்டினன்ட் ஜெனரல் KJS தில்லானின் Operation Sindoor: The Untold Story of India's Deep Strikes Inside Pakistan என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாக இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அறிவித்துள்ளார்.

இந்த ராணுவ நடவடிக்கை பற்றிப் பொதுவெளியில் அறியப்படாத பல ரகசியங்களை இந்தப் படம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் ஒரு பிரம்மாண்டமான பான்-இந்தியா (Pan-India) படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.