சினிமா செய்திகள்

சட்டைக்கூட கசங்காமல் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலிப்பதெல்லாம் ரஜினி சாரால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன்!

அக்.15ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமாக 'ஜெயிலர் 2' திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

அக்.15ம் தேதி வெளியான இப்படம், ஒரு வாரத்தில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் படக்குழுவிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,

“ஜெயிலர் 2 ரஜினிகாந்த் சாரின் ஸ்டார் பவர், ஸ்வாக் மற்றும் ஆராவின் உண்மையான காட்சி! பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் விறுவிறுப்பான கமர்ஷியல் என்டர்டெய்னர்!

அனிருத் கலக்கிவிட்டார்! அனைத்துக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பாளரும் இந்தப் படத்திற்காகத் தங்கள் இதயத்தையே கொட்டியுள்ளனர்.

ஷோமேன் நெல்சன் ஒரு மாஸ் ஹிட் கொடுத்துள்ளார்!

சட்டைக்கூட கசங்காமல் ரூ.500 கோடி வசூலிப்பதெல்லாம் ரஜினி சாரால் மட்டுமே முடியும்.

படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயிலர் 2

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ள இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மிர்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாபர் சாதிக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ஜாக்கி ஷெராஃப், வித்யா பாலன், விஜய் சேதுபதி, அபேக்ஷா போர்வால், மிதுன் சக்ரவர்த்தி, அன்னா ராஜன், ஹக்கிம் ஷா, பகவதி பெருமாள், மேகனா ராஜ், பூர்ணா மற்றும் ஜதின் சர்னா ஆகியோர் புதிய முகங்களாக இணைந்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

SCROLL FOR NEXT