சினிமா செய்திகள்

சிறந்த படம் உட்பட 6 Oscar விருதுகளை வென்றது One Battle After Another திரைப்படம்!

Nithish Kumar

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட One Battle After Another திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன. 98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட One Battle After Another திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், துணை நடிகர் (ஷான் பென்), தழுவல் திரைக்கதை, படத்தொகுப்பு மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் விருதுகளை குவித்துள்ளது.

98 வது ஆஸ்கார் விருதுகள் விழாவில் அதிக ஆஸ்கார் விருதுகளை வென்ற படம் என்ற சாதனையை படம் படைத்துள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட கோல்டன் குளோப் விருந்துகளிலும் அதிக விருதுகளை வென்று One Battle After Another சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.