சினிமா செய்திகள்

மார்ச் 6 முதல் திரையரங்குகளில் பறக்கப்போகும் 'ஓ பட்டர்பிளை'

இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கணவன், மனைவிக்குள்ளான காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் டிரெய்லர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'ஓ பட்டர்பிளை' படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 

SCROLL FOR NEXT