சினிமா செய்திகள்

ஓடிடி-யில் வெளியாகும் 'ஓ பட்டர்பிளை'

இந்த படம் மார்ச் மாதம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ பட்டர்பிளை’. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கணவன், மனைவிக்குள்ளான காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இந்த படம் மார்ச் மாதம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், ‘ஓ பட்டர்பிளை’ படம் வருகிற 8 -ந்தேதி முதல் சன் என்எக்ஸ்டி ஓடிடி தளத்தில் கண்டு மகிழலாம்.

SCROLL FOR NEXT