ஆலியா பட்- சமந்தா- தீபிகா படுகோனே 
சினிமா செய்திகள்

சம்பளம் மட்டுமல்ல... செல்வாக்கிலும் கெத்து! மாஸ் காட்டும் டாப் 10 கதாநாயகிகள்!

இந்திய திரையுலகில் தற்போதைய நிலவரப்படி அதிக செல்வாக்கும், உயர்ந்த பிராண்ட் மதிப்பும் கொண்ட டாப் 10 நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஆலியா பட் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது படங்கள் தாண்டி விளம்பரங்களிலும் ஆலியா பட் ஜொலித்து வருகிறார்.

திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு, சம்பளம், அவர்களுடைய வீட்டின் மதிப்பு, அவர்கள் பயன்படுத்தும் கார் மற்றும் வாழ்க்கை முறை குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருகின்றன.

ஆலியா பட்

அந்த வகையில், இந்திய திரையுலகில் தற்போதைய நிலவரப்படி அதிக செல்வாக்கும், உயர்ந்த பிராண்ட் மதிப்பும் கொண்ட டாப் 10 நடிகைகள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் எதிர்பார்த்தது போலவே பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஆலியா பட் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது படங்கள் தாண்டி விளம்பரங்களிலும் ஆலியா பட் ஜொலித்து வருகிறார். 20-க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் விளம்பரத் தூதராகவும் அவர் இருக்கிறார்.

2-ம் இடத்தில் தீபிகா படுகோனே, 3-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா, 4-ம் இடத்தில் கரீனா கபூர், 5-ம் இடத்தில் கியாரா அத்வானி ஆகியோர் உள்ளனர். 6 முதல் 10 வரையிலான இடங்களில் முறையே கீர்த்தி சனோன், அனன்யா பாண்டே, சமந்தா, தமன்னா, ஜான்வி கபூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து சமந்தா மட்டுமே இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.