‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன், லப்பர் பந்து படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்வாசிகா, லிஜோமோல், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘நூறு சாமி’ படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் ‘நூறு சாமி’ படத்தின் இரண்டாம் பாடலான “அம்மா அம்மாதான்” பாடல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்த கூட்டணியில் உருவான பிச்சைக்காரன் படத்தில் "நூறு சாமிகள் இருந்தாலும்" பாடல் ஹிட் ஆனது. அதேபோன்ற அம்மா சென்டிமென்ட் பாடலாக "அம்மா அம்மாதான்" அமைந்துள்ளது.
மோகன் ராஜா எழுதிய இப்பாடலுக்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.