சினிமா செய்திகள்

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’ - வெளியீடு தேதி அறிவிப்பு!

நவ.6ம் தேதி ஜீ5 தளத்தில் படம் வெளியாகிறது.

பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை, நூறு சாமி உள்ளிட்ட ஃபீல் குட் படங்களைத் தந்த இயக்குநர் சசி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடித்துள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘நூறு கோடி வானவில்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்ஷன் தயாரித்துள்ள படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.6ம் தேதி ஜீ5 தளத்தில் படம் வெளியாகிறது.

கடைசியாக சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் நூறு சாமி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இப்படம், உண்மை சம்பவம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT