செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
செப்டம்பர் 1-ந்தேதி முதல் வெளியாகும் படங்களை 8 வாரம் கழித்தே ஓடிடியில் வெளியிடுவோம் என கடிதம் கொடுத்தால் தான் தியேட்டரில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்களை விநியோகஸ்தர்கள் நிர்பந்திக்கின்றனர்.
கடிதம் கொடுத்தால் தான் படங்களை திரையிட அனுமதிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் சங்கம் தன்னிச்சை முடிவு செய்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் புதிய நடைமுறையை தன்னிச்சையாக புகுத்துவது கண்டித்தக்கது.
விநியோகஸ்தர்கள் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு தயாரிப்பாளர்களை அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும். ஆலோசனையின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவை ஏற்க முடியாது என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 250 திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த நிலையில், பாதியளவு கூட வசூலிக்காமல் பெரும் இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும், ஆண்டு தோறும் ரூ.700 கோடிக்கு அதிகமான பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விநியோகஸ்தர்கள் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, திரையரங்க உரிமையாளர் சங்க முடிவை ஏற்க முடியாது. இம்முடிவை கண்டித்து செப்.1 முதல் படப்பிடிப்பு, போஸ்ட் புரொக்டஷன் பணிகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்சனையை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் எடுத்துக்கூறி தமிழ்நாடு அரசு மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.