சினிமா செய்திகள்

நிவின் பாலி நடித்துள்ள Baby Girl படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நிவின் பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.நயன்தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நிவின் பாலி நடித்து முடித்துள்ளார்.

மாலை மலர்

நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

அண்மையில் நிவின் பாலி நடிப்பில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

இந்நிலையில், அருண் வர்மாஇயக்கத்தில் Baby Girl படத்தில் நிவின் பாலி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில், லிஜோ மோல் , சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள Baby Girl ஜனவரி 23 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.