சினிமா செய்திகள்

வணங்கான் படத்தின் புது அப்டேட்

படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார்.நடித்திருக்கும் அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

மாலை மலர்

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடிக்க தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தீவிரமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது அண்ணன் பாலாவிற்கு என் முழுமுதல் நன்றி .கடின உழைப்பு தந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றிகள். கதாபாத்திரத்துக்காக தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கும் அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வணங்கான் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.