சினிமா செய்திகள்

'பராசக்தி' படத்திற்கு புதிய சிக்கல்... சென்சார் போர்டு வைத்த செக்

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த படம் 'சென்சார் போர்டு' ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. படத்தில் சில காட்சிகளுக்கு 'சென்சார் போர்டு' எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை படக்குழுவினர் ஏற்க தயாராக இல்லை என்பதால் படம் தற்போது மறு தணிக்கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.