சினிமா செய்திகள்

குயிண்டன் டரண்டினோ - டேவிட் ஃபிஞ்சர் கூட்டணியில் உருவாகும் படம்.. ஹீரோ யார் தெரியுமா?

டாரண்டினோ இயக்கத்தில் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' வெளியானது.முதல் பாகத்தில் நடித்த பிராட் பிட் இப்படத்தில் நடிக்கிறார்.

மாலை மலர்

இயக்குநர் டேவிட் ஃபிஞ்சர் தன் புதிய படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.

பிரபல ஹாலிவுட் இயக்குனர்கள் குயிண்டன் டரண்டினோ மற்றும் டேவிட் ஃபிஞ்சர் ஆகியோர் இணைந்து புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளனர்.

கடந்த 2019 இல் டாரண்டினோ இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் வென்ற 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' படத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய படம் உருவாக உள்ளது.

இப்படத்திற்கு ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்: அட்வென்சர் ஆஃப் கிளிப் பூத் (once upon a time in hollywood: adventures of cliff booth) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

குயிண்டன் டாரண்டினோ எழுதிய இந்த கதையை , டேவிட் ஃபிஞ்சர் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த பிராட் பிட் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

Brad Pitt returns as Cliff Booth in the upcoming film "The Continuing Adventures Of Cliff Booth".Honest thoughts? pic.twitter.com/bOP2Bp6TZ3