சினிமா செய்திகள்

நீ ஃபாரெவர்- திரை விமர்சனம்

மாலை மலர்

கதை

காதல் திருமணத்தை வெறுக்கும் நாயகன் சுதர்ஷன் கோவிந்த், காதல் பற்றிய செயலி உருவாக்கும் நோக்கில் போலியாக காதலிக்க முடிவு செய்கிறார். மறுபக்கம், குடும்ப வாழ்க்கையை நம்பாத நாயகி அர்ச்சனா ரவி, தனது கதை எழுதுவதற்காக போலி காதலில் ஈடுபடுகிறார். இவ்விருவரும் சந்தித்து தொடங்கும் இந்த போலியான காதல், அவர்களது வாழ்க்கையையே எப்படி மாற்றியது என்பதை படத்தின் மீதிக்கதை.

இயக்கம்

காதலை நம்பாத இரு மனிதர்கள், போலியான காதல் மூலம் உண்மையான உணர்வுகளை கண்டுபிடிக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அசோக்குமார் கலைவாணி. காதலை நம்பாத இருவரின் மன மாற்றத்தை எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

ஆனால் திரைக்கதையில் புதுமை குறைவாக இருப்பது படத்தின் பலவீனமாகிறது. இருந்தாலும், போலியான காதல் உண்மையாக மாறும் தருணங்கள் படத்தை ஓரளவு ரசிக்க வைக்கிறது. பெரிய திருப்பங்கள் இல்லாமல், மென்மையான காதல் உணர்வுகளோடு நகர்த்தி இருக்கிறார்.

நடிகர்கள்

நாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார். காதலுக்கு முன், பின் என அவரது நடிப்பில் காணப்படும் மாற்றம் நன்றாக வேலை செய்திருக்கிறது. நடனம், உடல் மொழி என பல பகுதிகளில் திறமை காட்டியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவி, கதைக்கு தேவையான அளவில் நடித்திருக்கிறார். முக்கியமான கதாபாத்திரம் என்றாலும், பெரிய தாக்கம் ஏற்படுத்தாதது சிறிய குறையாகவே தெரிகிறது. துணை கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள் திரைக்கதைக்கு தேவையான அளவில் ஆதரவு அளித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறது.

இசை

பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்காவிட்டாலும், காட்சிகளுக்கு ஏற்ப பயணிக்கிறது.

படத்தொகுப்பு

படத்தொகுப்பு படத்தை சீராக நகர்த்த உதவுகிறது.