சினிமா செய்திகள்

#NBK109 - பர்த்டே கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பாலய்யா என அழைக்கப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று அவரது 64 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தெலுங்கு திரையுலகின் இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பாலகிருஷ்ணா தற்பொழுது அவரது 109 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்கவிருக்கிறார். இது அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் பால கிருஷ்ணாவை நேட்சுரல் பார்ன் ஸ்டார் என்ற பெயரை கொடுத்துள்ளனர். மிகப் பெரிய பில்டப் காட்சிகளுடன் பாலகிருஷ்ணாவின் அறிமுக காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொண்டுள்ளார். எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் பிரபல இந்தி நடிகரான பாபி டியோல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிலிம்ப்ஸ் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.