சினிமா செய்திகள்

நானி நடித்த `சூர்யாஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மாலை மலர்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் தெலுங்கு டிரைலர் இரண்டு நாட்கள் முன்பு வெளியானது. படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு, நடிகர்களான நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா கலந்துக் கொண்டனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ்நாடு விநியோகிக்கும் உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியான ஸ்டார், அந்தகன் மற்றும் பல ஹிட்டான திரைப்படங்களுக்கு விநியோகம் செய்த நிறுவனமாகும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.