சினிமா செய்திகள்

நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம்.. பெண் யார் தெரியுமா?

நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார்.நாக சைதன்யா, சமந்தா கடந்த 2021 ஆண்டு பிரிந்தனர்.

மாலை மலர்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர். இந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.

அதன்படி நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலா திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை நடைபெற்றது. இருவருக்கும் நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் வைத்து எளிய முறையில் நிச்சியதார்த்த விழா நடைபெற இருப்பதாக தெரிகிறது. இதில் இருவீட்டாருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.