சினிமா செய்திகள்

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா - வாழ்த்திய ராகவா லாரன்ஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இவரது முதல் அரசியல் மாநாட்டிற்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

மாலை மலர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாநாட்டு திடலில் ராம்ப்-ல் நடந்து சென்ற விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அன்போடு அணிந்தபடி விஜய் நடந்து சென்றார்.

விஜய் அவரது கட்சி கொள்கை மற்றும் அரசியல் சிந்தனைகளை தொண்டர்களுக்கு முன் ஆவேச உரையாற்றினார். இவரது முதல் அரசியல் மாநாட்டிற்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் பிரபு தேவா அவர்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.